Skip to main content

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு


இன்று (25.05.2022) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தி-ரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் ஆகியோர் பெருநகர சென்னை மாநாகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு.துரைராஜ், நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments