மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகயில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.05.2022) தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.செ.செந்தில்குமார், திரு.எஸ்.ஆர்.பார்த்திபன், திரு.ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர். ---------------------------------------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2022) சேலம் மாவட்டம், மேட்டூரில், காவிரி டெ...