இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று (27.05.2022) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல் துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாடு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது காவல் துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., உடனிருந்தனர். காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அ...