Skip to main content

‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.05.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


அதனை தொடர்ந்து செயற்கை புல் கால்பந்து மைதானத்தின் மாதிரி வடிவத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments